தோனியின் அன்புக்கு எல்லையே கிடையாது": சூர்யா நெகிழ்ச்சி

Prasu
4 years ago
தோனியின் அன்புக்கு எல்லையே கிடையாது": சூர்யா நெகிழ்ச்சி

நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீசுகிறது. இந்த நிலையில் தோனி குறித்து பேசியுள்ளார் நடிகர் சூர்யா இதனை பகிர்ந்துள்ளார்.

'அவர் நம்மிடம் செலுத்தும் அன்பை எப்படி நாம் திரும்ப கொடுப்பது என எண்ணி நான் தவித்தது உண்டு. இப்போது கூட அவர் பெண் குழந்தை அவரது ஆட்டத்தை பார்த்து கண் கலங்கி இருந்தார். அதற்கு காரணம் தக்க தருணத்தில் அவர் ஸ்கோர் செய்த ரன்கள். ஆட்டம் முடிந்த பிறகு மேட்ச் பாலில் (பந்து) கையெழுத்து போட்டு அந்த பெண் குழந்தையிடம் கொடுத்து அவர் ஆனந்தப்படுத்துவார். அது தான் தோனியின் அன்பு. எனது குழந்தைகளை சந்தித்திருந்தார். எனது மனைவி ஜோதிகா அவரை சந்திக்க வேண்டும் என சொன்னார். அதற்கும் நேரம் ஒதுக்கி கொடுத்தார் தோனி.

அதே போல 24 படத்தில் தோனியை சந்தித்து நான் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்வது போல ஒரு காட்சி. அதற்கும் சம்மதம் சொல்லி இருந்தார். இப்படியாக அவரது அன்புக்கு எல்லையே கிடையாது' என சூர்யா சொல்லி உள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4